இலங்கையின் கடன் வழங்குநர்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு : ஜுலி சங் அறிவிப்பு
இலங்கை தனது கடன் வழங்குநர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டதாக ஜுலி சங் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் தவணையை பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கும் இந்த சந்திப்பின் போது அவர் நந்தலால் வீரசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
அத்துடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நியாய பூர்வமானதாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்துடன் தொடர்புபட்டுள்ள அனைத்து தரப்பினரும் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வது மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Today, at my meeting with @CBSL Governor I extended my congratulations on the IMF’s staff-level agreement, marking progress in Sri Lanka’s effort to secure the second IMF installment. I reinforced the need for fairness in Sri Lanka's debt restructuring: equal & equitable… pic.twitter.com/vwcGm4FGZj
— Ambassador Julie Chung (@USAmbSL) October 25, 2023
இலங்கையில் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு நியாயம், வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் ஒரு பொருளாதார சூழல் அமைக்கப்படுவது குறித்து அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும் ஜுலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.