பஹல்காம் தாக்குதல்: பாக் அமைப்புக்கு அமெரிக்கா விதித்த அதிரடி தடை
பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானிய அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பு தடை செய்யப்பட்டதால் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், “தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்” என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி இந்தியாவுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டு வந்தாா்.
இந்தநிலையில், அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவின் முயற்சி
சா்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகின்றது.

இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தாா்.
படுகொலை சம்பவம்
அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் ஊடுருவி லஷ்கா் பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் பலரை கொடூரமாக சுட்டுக் கொன்றனா்.
தற்போது பஹல்காமில் மிகமோசமான படுகொலை சம்பவம் பயங்கரவாதமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        