ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்க முயற்சிக்கும் இலங்கை - அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை தெரிவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளை பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் திருமதி ஜூலி சாங் தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ரஷ்யா கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது, ஆனால் அது மூன்றாம் தரப்பினரை பாதிக்காது என்று திருமதி ஜூலி சாங் கூறினார்.
ரஷ்ய பிரதிநிதிகள் வருகை
திருமதி ஜூலி சாங், அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டது என்று கூறினார். அமெரிக்கா, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்காவில் மட்டுமே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்றும், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது என்ற மூன்றாம் தரப்பினரின் முடிவு அந்த நாடுகளின் முடிவு என்றும் கூறினார்.
இதேவேளை ரஸ்யாவின் எண்ணெய் தொடர்பான பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.