விசா வழங்கலை அதிரடியாக இடைநிறுத்தும் அமெரிக்கா...!
அமெரிக்கா, 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்த உள்ளது.
இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கூடுதல் விவரங்கள்
இந்தநிலையில், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு விசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மேலும் கடுமையான அணுகுமுறை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், ட்ரம்ப் அரசாங்கம் ஏற்கனவே குடியேற்ற விவகாரத்தில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |