அமெரிக்காவில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்காக ஈரான் மக்கள்
அமெரிக்காவில் (United States) இருந்து சுமார் 400 இற்கும் அதிகமான ஈரான் (Iran) நாட்டினர் மீண்டும் ஈரானிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக அந்நாட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஈரான் நாட்டினர்
இதில், அமெரிக்காவில் குடியேறிய 120 ஈரான் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 400 இற்கும் அதிகமான ஈரான் நாட்டினர் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவார்கள் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஈரானியர்களின் முதல் குழு விமானம் மூலம் தலைநகர் தெஹ்ரானை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்தும் அமெரிக்க அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
