அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்: வெளியான அறிவிப்பு
அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க (America) வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் (Howard Lutnick) தெரிவித்துள்ளார்.
ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூபாய் 1.47 லட்சத்தில் இருந்து ரூபாய் 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அண்மையில் கையொப்பமிட்டாா்.
புதிய கட்டணம்
ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய இந்த கட்டணம் 2026 ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு விண்ணப்பித்தவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் ஹெச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என அமெரிக்க அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஹெச்-1பி விசா கட்டண உயா்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறையாகவுள்ளது.
அதற்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விண்ணப்பம்
இந்தப் புதிய கட்டணத்தை ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும். 1990-களில் ஹெச்-1பி விசா நடைமுறை உருவாக்கப்பட்டது.
இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்பவா்கள் லாட்டரி முறையில் (குலுக்கல் முறை) தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.
திறன்வாய்ந்த பணியாளா்களை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த விசாவுக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பங்களைவிட ஏழு முதல் பத்து மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன.
பணியாளா்கள்
அதில் 74 சதவீதம் தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பை பெறுபவா்களாவா் அத்தோடு, நான்கு சதவீத விசாக்களை மட்டுமே கல்வியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் பெறுகின்றனா்.
கல்வியாளா்களும் மருத்துவா்களும் அதிக அளவில் அமெரிக்கா வர வேண்டும் ஆனால் பொறியாளா்களை மட்டுமே நிறுவனங்கள் பணியமா்த்த விரும்பினால் அவா்களில் அதிகம் சம்பளம் பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
குறைந்த சம்பளம் உடையோா் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் இதுவே என்னுடைய நிலைப்பாடு அத்தோடு ட்ரம்ப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளாா்.
குறைந்த சம்பளத்துக்கு பணியமா்த்தப்படும் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினரையும் அமெரிக்கா அழைத்து வருவது தவறு இதை அனுமதிக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
