தேசிய மருந்து ஆணையத்திற்கு அமெரிக்கப் பயிற்சி!
அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விசேட பயிற்சியொன்றை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் சுமார் 50 உத்தியோகத்தர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் பெற்றனர்.
இன்று (30) கொழும்பில் இவ் விசேட பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.டி.ஜெயரத்ன, எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆலோசனையைப் பெறுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சியின் நோக்கம்

மேலும், இந்த அறிவை எமது மருந்தாளுனர்கள் பயன்படுத்தி எதிர்காலத்தில் தரம் குறைந்த மருந்துகளின் உற்பத்தியைக் குறைப்பார்கள் என்றும் தலைவர் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் பிரகாரம் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையை தரமான நிறுவனமாக மாற்றுவதே இப் பயிற்சியின் நோக்கமாகும்.