இலங்கைக்கான பயண ஆலோசனையில் மாற்றமா.!அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கைக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச பயணம் குறித்து அமெரிக்க குடிமக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை தொடர்ந்து பயண ஆலோசனை புதுப்பிப்புகளை வெளியிடுவதாக தூதுவர் சுட்க்காட்டியுள்ளார்.
எனினும், “ஒக்டோபர் 9 அன்று இலங்கைக்கு வெளியிடப்பட்ட பயண ஆலோசனை நிலை 2 இல் உள்ளதாகவும்ஆலோசனை மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை," என்றும் தூதுவர் ஜூலி சங் எக்ஸ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய அறிக்கைகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையை திருத்தியமைத்துள்ளதாக பல சமீபத்திய அறிக்கைகள் கூறியதை அடுத்து இந்த தெளிவுபடுத்தல் வெளியாகியுள்ளது.
The @StateDept regularly issues travel advisory updates to allow U.S. citizens to make informed international travel decisions. The Travel Advisory issued for Sri Lanka on October 9 remains at Level 2--there was no change to the advisory level. https://t.co/MuygWSuEdt
— Ambassador Julie Chung (@USAmbSL) October 15, 2025
எவ்வாறாயினும், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் உள்ள நிலங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதால், கண்ணிவெடி அபாயங்களை உள்ளடக்கிய பயண ஆலோசனை கடந்த வாரம் மட்டுமே புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
