இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் தனது தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்ததற்கான காரணத்தை விளக்க, அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
“ஈரானியர்களைச் சந்திப்பதற்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குச் செல்லவிருந்த எனது பிரதிநிதிகளின் பயணத்தை நான் ரத்து செய்துவிட்டேன். பயணத்தில் அதிக நேரம் வீணடிக்கப்பட்டது, அதிக வேலை!” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தலைமைக்குள் பெரும் உட்கட்சி பூசலாம்
“அதுமட்டுமின்றி, அவர்களின் ‘தலைமைக்குள்’ பெரும் உட்கட்சிப் பூசலும் குழப்பமும் நிலவுகிறது. அவர்கள் உட்பட, யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், எல்லா அதிகாரமும் எங்களிடம் உள்ளது, அவர்களிடம் எதுவும் இல்லை!”என்று தெரிவித்துள்ளார்.

தூதர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் போரைத் தொடங்கும் என்று அர்த்தமல்ல என அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம்
பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
மேலும், “நாங்கள் இன்னும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம், “அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,பாகிஸ்தானில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெஹ்ரானின் கோரிக்கைப் பட்டியலை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் வழங்கிய பின்னர், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டு ஓமானுக்கு சென்றுள்ளார்.
X தளத்தில் பதிவிட்ட அராக்சி, கடந்த ஒரு நாளில் பாகிஸ்தானுக்கான தனது பயணம் "மிகவும் பயனுள்ளதாக" இருந்ததாகக் குறிப்பிட்டார்.
வோஷிங்டனின் நேர்மை குறித்தும் சந்தேகம்
மேலும், "நாங்கள் மிகவும் மதிக்கும் வகையில், எங்கள் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அந்நாட்டின் சகோதரத்துவ முயற்சிகளையும்" அவர் சுட்டிக்காட்டினார்.
Very fruitful visit to Pakistan, whose good offices and brotherly efforts to bring back peace to our region we very much value.
— Seyed Abbas Araghchi (@araghchi) April 25, 2026
Shared Iran's position concerning workable framework to permanently end the war on Iran. Have yet to see if the U.S. is truly serious about diplomacy.
பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தீர்க்க முயற்சிப்பதில் வோஷிங்டனின் நேர்மை குறித்தும் அவர் சந்தேகம் தெரிவித்தார். "ராஜதந்திரம் குறித்து அமெரிக்கா உண்மையிலேயே தீவிரமாக உள்ளதா என்பதை இன்னும் பார்க்க வேண்டும்," என்று அராக்சி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்