அமெரிக்கத் துணை ஜனாதிபதி வீட்டில் நள்ளிரவு தாக்குதல்!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது.
இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
இந்தநிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வார இறுதி விடுமுறைக்காகச் சின்சினாட்டி சென்றுள்ளனர்.
இதன்போது சின்சினாட்டியின் ஓஹியோ பகுதியில் உள்ள அவரின் வீட்டினருகே நள்ளிரவு திடீரென சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் உடனே சென்று கவனித்துள்ளனர்.
இதன்போது ஒரு நபர் கையில் வைத்திருந்த சுத்தியலால் வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
வீட்டின் நான்கு ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளின் வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |