சீனாவின் மூர்க்கத்தனம்! எதிர்க்கத் துணிந்த அமெரிக்க உயர்மட்டம்
தாய்வான் மீது ஏவுகணைகளை வீசும் சீனாவின் செயற்பாடுகளை எதிர்த்துப் போராட வேண்டும் என அமெரிக்கவின் முக்கிய கடற்படைத் தளபதிகளில் ஒருவரான வைஸ் அட்மிரல் கார்ல் தோமஸ் கூறியுள்ளார்.
அவ்வாறு தடுத்து நிறுத்தாவிடின் சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வழக்கமாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
தாய்வானைச் சூழ இராணுவ பயிற்சிகள்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸியின் தாய்வானுக்கான விஜயத்தை தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் தாய்வானைச் சூழ இராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்டிருந்தது.
இதன்போது பெலஸ்ரிக் ரக ஏவுகணைகளை சீனா செலுத்தியிருந்த போதிலும், அது தாய்வான் மீது நேரடியாக விழுந்ததா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
நான்ஸி பெலோஸியின் விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ்சின் ஐந்து உறுப்பினர்களும் தாய்வானுக்கு பயணம் செய்துள்ளமை சீனாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் தாய்வான் ஊடாக சர்வதேச கடற்பரப்பில் ஏவுகணைகளை செலுத்துவது பொறுப்பற்ற நடவடிக்கை என ஜப்பானின் யோகோசுகாவை தளமாக கொண்ட கடற்படை கப்பலின் தளபதியான வைஸ் அட்மிரல் கார்ல் தோமஸ் கூறியுள்ளார்.
இவ்வாறான விடயங்களுடன் போட்டியிடுவது மிகவும் முக்கியமானது என சிங்கபூரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவார காலம் சீனா நேரடி துப்பாக்கிச் சூடு
சீனாவின் இதுபோன்ற செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்த தவறும் பட்சத்தில், தற்போது இராணுவ காவல் அரண்களாக இருக்கும் தென் சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகளைப் போன்று தாய்வான் கடற்பரப்பு மாறிவிடும் என வைஸ் அட்மிரல் கார்ல் தோமஸ் எச்சரித்துள்ளார்.
தாய்வானைச் சூழவுள்ள கடற்பரப்பில் சுமார் ஒருவார காலம் சீனா நேரடி துப்பாக்கிச் சூட்டு பயிற்சிகளை முன்னெடுத்ததால், உலகிலேயே பாரிய கப்பல்கள் மற்றும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் மார்க்கத்தின் ஊடாக பயணங்கள் தடைப்பட்டிருந்தன.
இந்தப் பயிற்சிகளை தமது நாட்டின் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாக சீனா பயன்படுத்துகின்றது என தாய்வான் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
தாய்வானை சுற்றி மீண்டும் போர் பதற்றம் |
YOU MAY LIKE THIS
