சீனாவால் தங்களது எண்ணெயைப் பெற முடியாது! அமெரிக்கா எச்சரிக்கை
ஹோர்மூஸ் நீர்வழிக்குள் இருக்கும் சீனக்கப்பல்கள் இனி வெளியே செல்ல முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்நிபந்தனையாக ஈரான் சமீபத்தில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கோரியதை அடுத்து, குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
இது குறித்து ஐஎம்எஃப் உலக வங்கி கூட்டங்களின் இடையே செய்தியாளர்கள் குழுவிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்,
அனுமதிக்கப்பட மாட்டீர்கள்
"அந்தக் கப்பல்கள் இனி வெளியே செல்ல அனுமதிக்கப்படாது. எனவே, அவர்களால் தங்களுக்குத் தேவையான எண்ணெயைப் பெற முடியாது.

சுங்கக் கட்டணம் செலுத்துவோர் ஒருபோது கடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். மேலும், ஒரு நாடு சுங்கக் கட்டணம் செலுத்தினால், அவர்கள் அமெரிக்கத் தடைகளை மீறுகிறார்கள், அது ஒருபோதும் நல்ல முடிவில் முடிவதில்லை.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |