வாஷிங்டனில் கதிரியக்க வெடிகுண்டுத் தாக்குதல் அச்சம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராக ஈரானின் உயிர்க்கொல்லி சதித்திட்டங்களால் ஏற்படும் அச்சுறுத்தல் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜே கிளேட்டன் (Jay Clayton) இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் டர்ட்டி பாம் (Dirty Bomb) எனப்படும் கதிரியக்க வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி வந்தது.
அச்சுறுத்தலின் நுணுக்கங்கள்
இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்க உளவுத்துறை வசமுள்ள குறிப்பிட்ட தகவல்கள் அல்லது இந்த அச்சுறுத்தலின் நுணுக்கங்கள் குறித்து மேலதிகமாக கருத்து தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.
செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிற்கு உள்ள உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழு விசேட விசாரணையொன்றை நடத்தியது.
நாடாளுமன்றக் குழுவின் இந்த விசாரணையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் (Markwayne Mullin) மற்றும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (FBI) பிரதி இயக்குநர் கிறிஸ்டோபர் ராயா (Christopher Raia) ஆகியோரும் பங்கேற்றுச் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |