உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை- சற்று முன்னர் ஆரம்பமான விவாதம்!
parliament
uthaya gammanpila
sri Lanka
motion
By Kalaimathy
ஸ்ரீலங்காவின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, சற்று முன்னர் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையை ஒருமனதாக தோற்கடிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பது அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் இல்லை என்பதினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பி சானக தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி