தகுதி அற்ற அரசாங்கம் - கடுமையாக சாடிய உதயகுமார் எம்.பி

sri lanka fuel uthayakumar-mp issse
By Vanan Jun 14, 2021 10:55 PM GMT
Report

உள்வீட்டு நாடக சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பை மீளப் பெற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மண்ணென்ணை விலை அதிகரிப்பினால் சாதாரண மலையக மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு மக்களை கஸ்டத்தில் தள்ளிவரும் இந்த அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையை ஆகாயம் தொடும் அளவிற்கு உயர்த்தி மக்களின் தலையில் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தேயிலை விலை கூடும் போது லாபத்தை பற்றி வாய்திறக்காது மௌனமாகவே இருந்து விட்டு உலக சந்தையில் விலை குறையும் போது வௌியில் வந்து நட்டக் கணக்கை காட்டி புலம்பும் பெருந்தோட்ட கம்பனிகள் போலவே இந்த அரசாங்கமும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது அதன் லாபத்தை மக்களுக்கு வழங்காது விலை அதிகரித்த பின் மக்கள் மீது சுமையை ஏற்றி எரிபொருள் விலையை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டு அதனை மறக்கடிக்கச் செய்யவென புதுவித கூட்டு நாடகம் ஒன்றை தற்போது அரங்கேற்றி வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் ஒன்று சேர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்புக்கான அனுமதியை வழங்கிவிட்டு அதனை அறிவித்த அமைச்சர் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

உண்மையில் பிரதமரை பதவி விலக வேண்டும். அல்லது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த நாட்டில் புதுமையாக ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சரவை பதவி விலகுமாறு கூறுவதும் ஆளும் அமைச்சர் நாட்டின் பிரதமரை பதவி விலகுமாறு கூறுவதும் வேடிக்கையாக உள்ளது.

இந்த நாட்டு மக்களை ஆட்சி செய்ய தகுதி அற்ற அரசாங்கம் இது என்பது மிகத் தௌிவாக தெரிகிறது.

கொரோனா காலத்தில் பயணத்தடை விதிக்கப்பட்டு மக்களுக்கு வறுமான வழிகள் இல்லாது செய்யப்பட்டிருக்கும் இந்த காலத்தில் அவர்களின் சுமையை குறைக்க நிவாரணம் வழங்க வேண்டுமே தவிர அவர்களிடம் இருக்கும் கொஞ்சத்தையும் பிடுங்கி திண்ண முயற்சிக்கக் கூடாது.

ஆனால் இந்த அரசாங்கம் கொஞ்சம்கூட கருணை இன்றி அதனை செய்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உள்வீட்டு நாடக சண்டையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக எரிபொருள் விலை உயர்வை அரசாங்கம் மீளப் பெற வேண்டும்.

இல்லையேல் மக்கள் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது என மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024