இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விபரம் வெளியானது!
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்றுவரை 14 இலட்சம் பேருக்கு முதலாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாத்திரம் 33 ஆயிரத்து 17 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது.
அதேவேளை நேற்று முன்தினம் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசி இரண்டாம் தடவையாக 5,229 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது.
அந்த தடுப்பூசி முதற்கட்டமாக 09 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதல் கட்டமாக 14 ஆயிரத்து 917 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை இரண்டாவது தடவையாக பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 97 ஆயிரத்து 686 எனவும் அந்த பிரிவு தெரிவித்தது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்