திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வருகின்றது கட்டாய கட்டுப்பாடு!
Corona
Vaccine
People
Gampaha
Prasanna Ranatunga
Minuwangoda
SriLanka
Weddings
Vaccine card
By Chanakyan
கம்பகா மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
மினுவாங்கொடை கொரோனா தடுப்புக்குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
