நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்! பெற்றோரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
18 - 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் நாளை (21) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வயதினருக்காக கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக இருந்ததாக சமன் ராஜீந்திரஜித் (Prof. Shaman Rajindrajith) கூறினார்.
இந்த ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத காத்திக்கும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் தொடங்கியது.
இதையடுத்து இந்த கொரோனா தடுப்பூசி திட்டம் நாளை (21) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஆகவே கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு பேராசிரியர் சமன் ராஜீந்திரஜித் (Prof. Shaman Rajindrajith) பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.