மறைப்பதற்கு எதுவுமில்லை - ஆறு இலட்சம் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை -அரசாங்கம் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது கட்டத்திற்கு ஆறு இலட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்றையதினம் (04) "ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில்,
இந்த விடயத்தில் எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.இது விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்வித தவறும் இல்லை.நாங்கள் குறித்த நேரத்தில் இந்திய சீரம் நிறுவனத்திடம் கொள்வனவுக்கான கட்டளையை வழங்கியிருந்தோம். எனினும் அந்த நிறுவனத்தால் அவற்றை வழங்க முடியாமற் போயுள்ளது. இந்த தாமதத்திற்கு எதிர்பாராதவிதமாக இந்தியாவில் பரவிய கொலிட் தொற்றே காரணமாகும்.
இலங்கையில் ஏற்கனவே தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸுக்கு ஒரு மாற்று தடுப்பூசியை வழங்குவது தொடர்பில்ஆராய்ந்து வருகிறோம்.
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் அனுமதியின் அடிப்படையில் மட்டுமே இந்த விடயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார். முதல் சுற்றின் கீழ், 925,242 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது,
தற்போது, 600,000 அளவு பற்றாக்குறை உள்ளது, ஏனெனில் கொள்வனவுக்கான அனுமதி கோரிய தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து வராதததே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.