வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான புதிய சிக்கல்
இலங்கையில் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சர்வதேச சுகாதார விதிகளுக்கமைய, மஞ்சள் காமாலை தடுப்பூசியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமானது.
இந்நிலையில் இலங்கையில் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்நோய் பரவும் நாடுகளுக்குச் செல்வதன் மூலம் நோய் தாக்கும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது.
சர்வதேச திட்டம்

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த, eliminating yellow fever epidemic eye 2026 எனப்படும் சர்வதேச திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அனைத்து உறுப்பு நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் இந்த திட்டத்திற்கமைய செயல்பட வேண்டும். இந்நிலையில் இலங்கையில் பல துறைகள் பலவீனமாக காணப்படுகிறது.
எனவே இதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் அவப்பெயர் ஏற்படலாம் என நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.