அலெக்ஸிற்கு நீதிகோர 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலைத் தீர்மானம்

Sri Lanka Police Jaffna
By Vanan Nov 23, 2023 11:45 AM GMT
Report

வட்டுகோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த வழக்கில் 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா அழைப்பு விடுத்தார்.

தாக்குதல் மற்றும் சித்திரவதை

1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் தமிழர்களின் காணிகள்! ரணிலின் நற்செய்தி

1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் தமிழர்களின் காணிகள்! ரணிலின் நற்செய்தி

வட்டுக்கோட்டை, சித்தன்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டைப் காவல்துறையினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அலெக்ஸிற்கு நீதிகோர 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலைத் தீர்மானம் | Vaddukkoddai Death Cause

இறப்பதற்கு முன்னர் இளைஞர் பேசிய காணொளிப் பதிவொன்றில், காவல்துறையினர் தன்னைச் சித்திரவதை செய்தனர் என்று கூறியிருந்தார்.

இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில் தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடக்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞனின் இறுதிக் கிரியைகள் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்கெடுப்புடன் நடந்தன.

உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை: அச்சம் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை: அச்சம் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

வழக்கு விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை 24ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனின் சார்பாக 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.

அலெக்ஸிற்கு நீதிகோர 35க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலைத் தீர்மானம் | Vaddukkoddai Death Cause

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, “இளைஞனின் மரணம் கொலை என்பது தெட்டத் தெளிவானது. இந்த வழக்கு நடவடிக்கையில் அனைத்துச் சட்டத்தரணிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.

பிரதானமாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் இணைந்துகொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

“நாளைய தினம் வழக்கு நடைபெறவிருக்கின்றது. அன்று அவரது உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதையால் தான் இளைஞர் மரணமடைந்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை காவல்துறை தரப்பில் விரைவாக எடுக்க வேண்டும்.

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

ராஜபக்சர்களுக்கு விழுந்த அடி! மொட்டு பிரிந்ததை ஊடகங்களுக்கு அறிவித்தார் ரணில்

அனைத்து விடயங்களும் நீதிமன்றத்துக்கு வரவேண்டும். இந்தக் கொலைக்குக் காரணமான அனைவரும் நீதிமன்றில் உடனடியாக முற்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நோக்கத்துடன் யாழ்ப்பாணம் நீதிமன்றில் விண்ணங்களை முன்வைப்போம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள வேண்டும்.

காவல்துறை காவலில் மரணம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட பகிரங்க சவால் அதை நாம் எதிர்கொள்வோம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024