கொட்டும் மழையிலும் காணி அபகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!
jaffna
protest
land
keerimalai
northern province
kankesanthurai
By Kalaimathy
வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி