வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka SL Protest NPP Government
By Theepan Sep 20, 2026 03:44 PM GMT
Report

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14வது வாரமாக இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எமது வளமான காணிக்குள் விவசாயம் செய்யும் இராணுவம்

 போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள் கடக்கின்றது.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின் வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார். கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட பின்னர் மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் முரண்பாடான கருத்து

ஆனால் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தேவைக்காக 1700 ஏக்கரும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக 700 ஏக்கர் வேண்டும் என கூறுகிறார்.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தையும் கூறும் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு நம்புவது

கொடுத்த வாக்குறுதி உதாசீனம் 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை உதாசீனம் செய்துவருகிறார்.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

அநுர அரசின் பேரழிவு அரசியல்... அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்

அநுர அரசின் பேரழிவு அரசியல்... அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்!

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி