பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவம்(காணொளி)
Jaffna
Hinduism
By Vanan
யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோசற்வத்தின் இரதோற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று (28) வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்றுவந்தது.
பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்பு
ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து விஷ்ணுபகவான் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகனித்து வீதியுலா சென்றார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வைக்கண்டு பெருமாளின் அருளைப்பெற்றுக்கொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
படங்கள்










மரண அறிவித்தல்