டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் மாற்றம்
இன்றைய நாளுக்கான (26.5.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.69 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.
விற்பனை விலை
நேற்றைய தினம் (25) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.42 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று அது 7.73 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 427.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 444.30 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 383.63 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.55 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.79 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |