யாழ்ப்பாணம் இணுவிலில் தொடருந்துடன் மோதியது வான் : தந்தை , மகள் ஸ்தலத்தில் பலி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தொடருந்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தந்தை , மகள் ஸ்தலத்தில் பலி
இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கு காரணம்
விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடருந்து கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி