வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
By Dharu
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2026ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் இருபத்தேழாம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் நினைவுக்கல்லுக்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி