வீட்டில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மலர்கள் வைப்பவரா நீங்கள்....! இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்
தற்போது பலரது வீடுகளில் மண் அல்லது வெண்கல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பல வண்ண மலர்களை பரப்பி அலங்கரித்து வைக்கிறார்கள்.
இவ்வாறு செய்வதற்கு பலர், அழகுக்காக என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு பின்னால் பெரும் ரகசியம் ஒளிந்து உள்ளது.
பழங்கால வீடுகள் அல்லது பெரிய கடைகளில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பல வண்ண பூக்கள் பரப்பி வைத்திருப்பார்கள்.
ஒளிந்துள்ள ரகசியம்
அவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாத்திரம் உருளி என்று கூறப்படுகின்றது. அந்த பாத்திரமானது வெண்கலம், செம்பு மற்றும் மண்ணினால் செய்யப்பட்டு இருக்கும்.
பழங்காலம் முதலே உருளியில் நீர் நிரப்பி வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
இது செல்வத்தை ஈர்த்து, எதிர்மறை சக்திகள், கண் திருஷ்டி ஆகியவற்றை நீக்குவதற்கான பரிகார முறையாகும்.
உருளியில் பயன்படுத்தப்படும் உலோகம், நீர், பூ ஆகிய மூன்றும் நேர்மறை ஆற்றல்களை, தெய்வீக சக்தியை பரப்ப கூடியவையாகும்.
இதேவேளை, வீட்டில் உள்ளவர்கள் வெளியே புறப்படும் போது இதை பார்த்து விட்டு சென்றால் அந்த காரியம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
உருளியை வைக்க வேண்டிய இடம்
இந்த காலத்தில் வாஸ்துவிற்காக பலர் உருளியை பயன்படுத்துகிறார்கள். இந்த உருளியை வீட்டில் எந்த இடத்தில் வைத்தால், என்ன நன்மை கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அதன்படி, வீட்டில் அனைவரின் பார்வையிலும் தென்படும் இடங்களான வீட்டின் கூடம் மற்றும் நுழைவு வாசலில் வீட்டின் வாஸ்த்து அமைப்பின் பிரகாரம் வைப்பது சிறந்ததாகும்.
அத்துடன், பித்தளை, வெள்ளி, ஐம்பொன், தங்கம், கண்ணாடி, மண் மற்றும் பீங்கான் போன்றவற்றால் ஆன உருளியையும் பயன்படுத்தலாம்.
அதே சமயம், சில்வர், இரும்பு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களால் ஆன உருளியை எவரும் பயன்படுத்தக் கூடாது.
மேலும், தினமும் நீர் மற்றும் மலர்களை மாற்ற வேண்டும். அதாவது வாடிய மலர்கள் வாடாமல் இருக்க வேண்டும் என்பதுடன் காம்புகள் இல்லாத மலர்ளை பயன்படுத்துவது நல்லதல்ல.
எனவே, உங்கள் வீட்டில் செல்வம் செழிப்பதற்கும் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கும் மற்றும் மகிழ்ச்சி வீடுகளில் நிரம்பி இருக்க இன்றே வீட்டில் உருளியை சரியான முறையில் பயன்டுத்துங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |