யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறுத்தக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (11.03.2025) மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் (Jaffna). மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
கையெழுத்து போராட்டம்
இந்த போராட்டத்தில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த முதலிகே, ராஜ்குமார் ரஜீவ்காந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசன், பௌத்த தேரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர்கள், மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கவன ஈர்ப்பு பேரணி
இதேவேளை, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரனி இன்றைய தினம் (11.03.2025) வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியானது நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் .
பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தினம் ஆரம்பமானது. இதன்போது மகளிர்களின் உரைகள் இடம்பெற்றன.
"பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குக, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் பின் தொடர்வது, தொலைபேசியில் அழைப்பது, புகைப்படம் எடுப்பது, விசாரணை செய்வதை உடன்நிறுத்துக" என்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கிய வாகனமும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்துகொண்டனர்..
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய கிளையின் ஒருங்கிணைப்பில் யாழ். பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட "பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்" என்ற தொனிப் பொருளிலான கருத்துப்பகிர்வு இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப் பாளர் த கனகராஜ் தலைமையில் குதித்த கருத்தாய்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீட தலைவி சட்டத்தரணி திருமதி கோசலை மதன், சட்டத்தரணி புராதனி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்