வவுனியாவில் ஒரு பகுதியில் பயணக்கட்டுப்பாடு முழுமையாக இறுக்கம்!
corona
vavuniya
lock down
By Kalaimathy
சகாயமாதாபுரம் பகுதியில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் கொரோனா தொற்றுநோயாளர்கள் சிலர் அண்மையில அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற வவுனியா சுகாதார பிரிவினர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்திற்குள் உட்பிரவேசிக்கும் முக்கிய வாயில்களில் பொலிசாரையும், இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அத்தியவசிய தேவையை தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச்செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்