வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது
மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கரடியனாறு பிரதேசத்தில் வைத்த நேற்றிரவு (08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை தொடர்பான விசாரணையை திசை திருப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை
இது குறித்து அவர் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு - வவுணதீவில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
வவுணதீவு காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளால் துப்பாக்கிகள் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை தவறாக வழிநடத்திய சந்தேகத்தின் பேரில் குறித்த புலனாய்வு பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
