வவுனியா விலங்கறுமனை சுகாதார சர்ச்சை தொடர்பில் முக்கிய நடவடிக்கை

Vavuniya Northern Provincial Council Northern Province of Sri Lanka
By Dharu Jul 30, 2025 10:12 AM GMT
Report

வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான விலங்கறுமனை (கொல்களம்) சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாக மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் சென்று பரிசோதனை மேற்கொண்டு தெரிவித்திருந்த நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை குறித்த கட்டடத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஒப்பந்தகாரர்கள் குறித்த இடத்தினை மாநகரசபை சீர்செய்து தரும்வரையில் விலங்குகளை அறுக்கமுடியாது என தெரிவித்து விலங்குகளை இறைச்சிக்காக அறுக்காறு நிறுத்தியதுடன் வவுனியாவில் உள்ள இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோட்டாபயவுக்கு உத்தரவு

யாழ்ப்பாணத்திற்கு சென்று சாட்சியமளியுங்கள்! கோட்டாபயவுக்கு உத்தரவு

சுகாதார பிரச்சனை

இதனால் மாநகரசபையின் வருடாந்த வருமான இழப்பிற்கும் இது காரணமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா மாநகரசபை செயலாளர் உள்ளிட்ட குழு விலங்கறுமனயை பார்வையிட்டதன் பின் ஒப்பந்தகாரர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

வவுனியா விலங்கறுமனை சுகாதார சர்ச்சை தொடர்பில் முக்கிய நடவடிக்கை | Vavuniya Animal Health Controversy

இதன்போது ஒப்பந்தகாரர்களால் விலங்கறுமனைகளை செயற்படுத்துவதாக இருந்தால் மாநகரசபைக்கு சொந்தமான குறித்த கட்டிடத்திதை பார்வையிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு கூறிய சுகாதார பிரச்சனைகளை சீர்செய்து தரவேண்டும் என கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

இதன் பிரகாரம் 29.07.2025 திகதியிடப்பட்டு வழங்கப்பட்ட கடிதத்தில், குறித்த விலங்கறுமனை மின்சார விநியோகம் முன்னறிவித்தல் இன்றி துண்டிக்கப்பட்டமை தொடர்பில் மின்சார சபையிடம் பதிலை சபை எதிர்பார்த்துள்ள அதேநேரம் 23.07. 2025 அன்று மின் இணைப்பு மீள வழங்கப்பட்டுள்ளது.

சுனாமி தாக்கத்திற்கு மத்தியில் ஜப்பான், ரஸ்யாவில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

சுனாமி தாக்கத்திற்கு மத்தியில் ஜப்பான், ரஸ்யாவில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

புனரமைப்பு பணி

சபையின் விலங்கறுமனையினை சென்று பார்வையிட்ட குழுவினர் அங்கே சில புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டியுள்ளதை குறிப்பெடுத்துக் கொண்ட போதிலும் அவை அம்மனையின் தொடர் செயற்பாடுகளை பாதிப்பதாக கருதவில்லை என கூறப்படுகிறது.

வவுனியா விலங்கறுமனை சுகாதார சர்ச்சை தொடர்பில் முக்கிய நடவடிக்கை | Vavuniya Animal Health Controversy

தங்களுடைய செயற்பாடுகளை இடைநிறுத்தும்படி சபை எழுத்துமூலமான கட்டளைகள் எதனையும் வழங்கவில்லை என குறிப்பிடுவதுடன் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளுவதில் தடை ஏதும் இல்லை என்பதையும் அறியத்தருகிறேன்.

குறித்த விலங்கறுமனையின் சுகாதாரம் தொடர்பில் சபை தொடர்ந்தும் கரிசனையுடன் சேவைகளை வழங்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடிதம் மூலம் தெரிவித்ததை தொடர்ந்து இன்று முதல் விலங்கறுமனை திறக்கப்பட்டதுடன் இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

இனிய மாநகர சபை செயலாளர் பாலகிருபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தானும் பொது சுகாதார பரிசோதகரும் விலங்கறுமனைக்கு நேரடியாக சென்று பார்வையற்றதாகவும் ஆணையாளரும் குறித்த இடத்தினை நிகழ்நிலை மூலமாக பார்வையிட்டதன் அடிப்படையில் குறித்த இடத்தில் சுகாதார சீர்கேடுகள் எதுவும் இல்லை எனவும் சில திருத்த பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதோடு அப்பணிகள் குறித்த இடத்தில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தடையாக இல்லை எனவும் கண்டறிந்ததன் அடிப்படையில் மீளவும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடி குறித்த கடிதத்தை வழங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தி - திலீபன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026