வீடு புகுந்து அட்டகாசம் செய்த இளைஞர் குழு!
police
vavuniya
attack
investigation
By Kalaimathy
வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் இருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதத்திற்குள்ளானது.
நேற்றய தினம் இரவு வவுனியா மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகளுடன் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலில் இருவர் காயமடைந்ததுடன் வீட்டின் பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டதுடன் அந்த குழு தப்பிச் சென்றது. தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அந்தக் கும்பல் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீட்டனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்