வழமைக்கு திரும்பியுள்ள போக்குவரத்து- சாரதிக்கு கொரோனாத் தொற்று உறுதி!
corona
vavuniya
bus
driver
sri Lanka
By Kalaimathy
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கொரனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இ.போ. ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பயணத்தடையின் பின்னர் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் இ.போச மற்றும் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு கொரனா தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி