வவுனியாவில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவு
corona
vavuniya
death
By Jaso
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிறுநீரக நோய்காரணமாக கடந்தசில நாட்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிடாச்சூரி பகுதியைசேர்ந்த 60 வயது முதியவரே உயிரிழந்துள்ளதுடன் இவரது மரணத்துடன் வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது கொரோனா நோயாளிமரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்