வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!
corona
vavuniya
death
By Kalaimathy
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த நபருக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணிப் பகுதியை சேர்ந்த குறித்த நபர் நேற்றய தினம் காலை சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் மரணமடைந்திருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்