வடக்கின் ஒரு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்!
corona
vavuniya
northern province
By Kalaimathy
வவுனியாவில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் முடிவுகளின் அடப்படையில் 18பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்