வவுனியா பிரதேச செயலகத்தினுள் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு- விளக்கம் கோரியுள்ள மனித உரிமை ஆணைக்குழு!
vaccine
vavuniya
human rights
sri Lanka
notice board
By Kalaimathy
வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அது தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ்(T.Kanakaraj) எழுத்து மூலமான விளக்கம் கோரியுள்ளதாக அறிய முடிகிறது.
வவுனியா பிரதேச செயலகத்தினுள் சேவை பெற வருவோர் அடையாள அட்டையையும் , தடுப்பூசி அட்டையையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதோர் பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்டமாட்டார்கள் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் , மனிதவுரிமை ஆணைக்குழு பிரதேச செயலாளரிடம் அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தினை கோரியுள்ளது.