வவுனியாவில் கோவிலுக்கு சென்ற சிறுவன் மாயம்- காவல்துறையை நாடிய தந்தை!
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவனை காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்ற சிறுவனைக் காணவில்லை எனவே அவரைக் கண்டுபிடித்து தருமாறு சிறுவனின் தந்தை வவுனியா காவல் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் என்ற 17 வயதுடைய சிறுவன் நேற்று காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை . எனவே அவரைக்கண்டு பிடித்துத்தருமாறு அவரது தந்தை இன்று அதிகாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .