வவுனியாவில் விசேட நடவடிக்கையில் களமிறங்கியுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!
வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சோதனை நடவடிக்கை இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வவுனியாவில் அமைந்துள்ள வங்கி, மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் மருத்துவ நிலையங்கள், உணவகங்களில் இன்று காலை முதல் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியர் அரங்கன் மற்றும் பிரசன்னா தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.










நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25