வடக்கில் முடக்கப்படும் பிரதேசம்- இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
corona
vavuniya
lock down
northern province
By Kalaimathy
வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதியில் கடந்த வாரமளவில் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவர்கள் கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவருடனும் தொடர்புகளை பேணிய 100 பேருக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் தொற்றுநீக்கல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதி இன்று காலையிலிருந்து முடக்கப்படுவதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்