வவுனியா மாவட்ட தேவாலயங்களில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ்!
srilanka
vavuniya
By Vasanth
வவுனியாவில் கிறிஸ்தவ தேவலாயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆராதனையின் போது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் பல பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வருகின்ற 4ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை முழுவதும் உள்ள தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்க கூடியதாக உள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்