சிங்கள பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்- குழப்ப நிலையால் பொலிஸார் பிரசன்னம்!

srilanka vavuniya northern
By Vasanth Mar 23, 2021 02:06 AM GMT
Report

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று மாணவர்களால் முற்றுகையிடப்பட்டது.

அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் குறித்த பட்டதாரிகள் ஆசிரியர்களாக கடமையாற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாடசாலை மாணவர்கள் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது.

எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகையிட்ட மாணவர்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு பொலிஸார் சென்றிருந்தனர்.

இந்நிலையில் பிரதேச செயலாளர் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் சிலருடன் முன்னெடுத்த பேச்சு வார்த்தையடுத்தும் கோரிக்கை நிறைவேறாத நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதன் போது ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமாரவிடம் வினவியபோது, பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம்.

எனினும் ஒருசில நாட்களில் அவர்களை மீண்டும் பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்திருந்தாலும் பிரதேச செயலக வேலைகள் காரணமாக அவர்களை விடுவிப்பதில் தாமதம் காணப்பட்டது. இந் நிலையிலேயே இப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் என தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016