படுகொலை புரிந்த அரசாங்கத்திடமே தீர்வைப் பெற்றுத்தர கேட்கின்றோம்- முன்னாள் போராளி அரவிந்தன்!

mahinda vavuniya gotabaya press meet northern province
By Kalaimathy Nov 12, 2021 09:52 AM GMT
Report

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தால் தான் நாம் இனப்படுகொலைக்கு உள்ளானோம். ஆகவே இந்த அரசாங்கத்திடமே எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு தீர்வைத் தர வேண்டும் என்று கேட்கின்றோம் என முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து முன்னாள் போராளிகள் அனைவர் சார்பாகவும் மாவட்ட ரீதியாக ஒவ்வொருவராக நாங்கள் தென்னிலங்கையிலே உள்ள அரசியல் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான ஒரு பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்திலே, போராளிகளுடைய அன்றாட தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள், அடக்குமுறைகள், விசாரணைகள், தொடர்ந்து வரும் வழக்குகள், அரசியல் கைதிகளுடைய பிரச்சினை, காணாமல் போனவர்களுடைய பிரச்சினை, காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு, மற்றும் பெண் போராளிகளுடைய, அதிமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக பேசி இருந்தோம்.

மிக முக்கியமாக எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி, அனுஷ்டிக்கப்பட இருக்கின்ற மாவீரர் தினம் தொடர்பாக பேசி இருந்தோம். காரணம் எங்களுக்கு மாவீரர் தினம் தொடர்பிலே, விதிக்கப்படுகின்ற தடைகள், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக அவர்களுக்கு சுட்டிக்காட்டிய விடயம், இலங்கையிலே இரண்டு தரப்புகள் யுத்தத்திலே ஈடுபட்டிருந்த நிலையிலே ஒரு தரப்பை அவர்கள் ஒதுக்கி விட்டிருக்க கூடியதாக தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. இங்கே இறந்தவர்களை நினைவு கூருவது என்பது விடுதலைப்புலிகள் என்பது அறவே இல்லாத நிலையிலே, விடுதலைப்புலிகளில் இருந்த தங்களுடைய குடும்ப உறவுகளை நினைவு கூருகின்ற ஒரு நிகழ்வே நடைபெற்று வருகின்றது.

ஆகவே அவர்களை புதைத்த இடத்திலே நாங்கள் வழிபாடுகளை செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடல்களை நாங்கள் செய்திருந்தோம். வடக்கு கிழக்கிலே, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற ஒரு நிலை காணப்படுகிறது.

எமது பகுதி எங்குமே இராணுவ காவலரண்கள் அல்லது தடை முகாம்கள் காணப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. காவல்துறையின் அல்லது சிவில் சமூகத்தினுடைய வாழ்க்கையை இராணுவம் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலைமை இங்கே காணப்படுகின்றது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், JVPயினுடைய சார்பிலே அவர்களுடைய தலைமை செயலகத்திலே நலிந்த ஜெயதீஷ்ச மற்றும் கமநல அமைச்சராக இருக்கும் கூடிய மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வீடு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குரிய ஜீவன் தொண்டமான், ஆகியோரை நாங்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

கோட்டாபயவையும் மஹிந்தவையும் சந்திப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். எங்களுக்கான நேரங்களை எடுத்துக் கொள்ள முடியாத, ஒரு நிலைமை காணப்பட்டது. ஒவ்வொரு நாளும், நாங்கள் நினைவஞ்சலிகளை செய்வது அல்லது கடையடைப்பு என்று கூறினால் எங்களுக்கு 365 நாளும் போதாத ஒரு நிலைமை காணப்படும்.

ஒரு நாளை, நாங்கள் மாவீரர் தினத்திலே போரிலே ஈடுபட்டு இறந்த போராளிகளை நினைவு கூருவதற்கும், முள்ளிவாய்க்கால் 18  ஒட்டுமொத்த பொதுமக்களுக்குமான நினைவேந்தலுக்கான நிகழ்வாக, நாங்கள் அனுஸ்டிக்கிறோம். அதை அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் சந்தித்து கதைத்த போது முன்னாள் போராளிகளுக்கு அவர்கள் முன்னுரிமை அடிப்படையிலே உதவிகளை வழங்குவதற்கு விரும்புவதாக, தெரிவித்திருந்தனர். இங்கே சில விடயங்களிலே ஜனாதிபதி கூறுவது போன்று மரண சான்றிதழ் பத்திரங்களை வழங்குவது என்பது, ஒருவருக்கு இருக்கக்கூடிய நோயை அறியாது அவருக்கு மருந்தை வைத்தியர் கொடுப்பதற்கு சமமானது.

இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம். இந்த அரசாங்கத்திடமே நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு ஒரு தீர்வைத் தர கேட்கின்றோம். தமிழ் மக்கள் தேசிய இனமாக சுய நிர்ணய உரிமையோடு சமத்துவமாக சிங்கள மக்களோடு வாழ்வதற்காக நாங்கள் மிகுந்த பிரயாசையோடு விரும்புகின்றோம். இனி ஒரு போரையோ அல்லது எதிர்கால சந்ததி ஒரு போருக்குள் செல்வதை நாங்கள் மறுதலிக்கின்றோம்.

நாங்கள் அதை விரும்பவில்லை. அதனால் தான் நாங்கள் தென்னிலங்கைக்கு சென்று இது சம்பந்தமாக பேச விரும்புகின்றோம். இதனைவிட முன்னாள் போராளிகளுக்கு வீடுகள் இல்லை, காணிகள் வழங்கப்படவில்லை, மின்சாரம் இல்லை, மிக இக்கட்டான நிலைமையிலே வாழ்கின்றோம், 12 வருடமாக அரசு கூறிய எந்த விடயங்களையுமே, இங்கு முன்னெடுக்கவில்லை  ஒரு லட்சம் ரூபாய் நிதியிலே கடன் வழங்குகின்ற நிலை கூட இல்லை.

அந்த நிலையிலே, எங்களுக்கு நேற்றைய தினம், விசேடமாக அரச தலைவரின் செயலணியால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு, நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலே சாட்சியம் அளிக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். அந்த இடத்திலே சாட்சியம் அளித்திருந்தோம். போரிலே என்ன நடந்தது? என்பதை மிக அறுதியாக, கூறியிருந்தோம்.

போராளிகள் தற்போது என்ன நிலைமையிலே இருக்கிறார்கள்? எங்களுக்கு இங்கே இவ்வளவு அடக்கு முறைகள், நாங்கள் இந்த நிலைமையிலே, விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். அரசியல் கைதிகள் இத்தனை வருடமாக சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் விடுதலையாவதற்கு எந்த வழிவகையும் இல்லாமல் இருக்கின்றது என்பதை நாங்கள் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தோம். கோட்டாபய கேட்டிருக்கிறார், புலம்பெயர் தமிழர்கள் இங்கே முதலீடுகளை செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களை தடை செய்து வைத்துக்கொண்டு  அழைப்பது என்பது மிக ஏற்புடைய ஒரு காரணமாக எங்களுக்கு தெரியவில்லை.

விடுதலைப்புலிகளினுடைய தடையை நீக்க வேண்டும். ஏனென்று கேட்டால் விடுதலைப்புலிகளை தடை நீக்கி, JVP போல் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திலே ஒரு அரசியலிலே பங்கு கொண்டு சிங்கள மக்களோடு, இணக்கமாக வாழக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

போராளிகளை பின் தொடர்ந்து அவர்களை அடக்குமுறைக்குள் வைத்துக் கொள்ளாமல் திருப்பியும் அவர்களை பயங்கரவாதிகளாகவே சித்தரிக்காமல், நாங்கள் இப்போது சமூகத்துக்குள், சமூகமயப்படுத்தி இருக்கிறோம்.

நாங்கள் இப்போது பொதுமக்களாகவே இருக்கிறோம். ஆகவே எங்களுக்கான நிவாரண திட்டங்களை செய்து தர வேண்டியது இந்த அரசினுடைய கடமையே என்பதனை அந்த ஆணைக் குழுவிலே பதிவு செய்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026