தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு- ஏமாற்றத்துடன் திரும்பிய நோயாளர்கள்!
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலை தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தாதியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டு வந்த தாதியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் வைத்தியசாலைக்கு சென்றும் சிகிச்சை பெறாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முற்கூட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு தெரிந்திருந்தால் பணம் செலவழித்து, சிரமத்தின் மத்தியில் வைத்தியசாலைக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்காது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.






