தமிழர் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உயிரிழந்த ஆண் ஒருவரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா ஈரப்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப் பகுதியில் இருந்தே குறித்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அதே பகுதியில் வசித்து வந்த ஒருவருடையது எனவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனித எச்சங்கள்

குறித்த நபர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாகவும், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அவருடையதாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் காணமால் போயுள்ளார்.
விசாரணை

இவ்வாறான நிலையில், இந்த மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
