வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பாரிய தொழிற்சாலை
ஆண்டுக்கு 120,000 மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யக்கூடிய சீனி தொழிற்சாலையை வவுனியா மாவட்டத்தில் தொடங்க தோட்டத் தொழில் அமைச்சகம் தயாராகி வருகிறது.
இந்த திட்டத்தை சுடெக் சீனி இண்டஸ்ட்ரீஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிறு பயிர் வளர்ச்சி, அதனுடன் தொடர்புடைய தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சகம் இணைந்து செயல்படுத்த உள்ளன.
தொழிற்சாலையை தொடங்கும் வகையிலான, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கரும்பு சாகுபடிக்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டு சீனி நுகர்வு 650,000 மெட்ரிக் தொன் ஆகும். பெல்வத்த, செவநகல, கல்லோயா மற்றும் ஆத்திமலை ஆகிய இடங்களில் உள்ள சீனி தொழிற்சாலைகள் இந்த ஆண்டு 100,000 மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாட்டின் மொத்த சீனி நுகர்வுகளில் 15 சதவீதம் ஆகும். உள்நாட்டு தேவையில் எண்பத்தி ஐந்து சதவீதம் ரூ .40 பில்லியன் செலவில் சீனிஇறக்குமதி செய்யப்படுகிறது.