வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
Sri Lankan Tamils
Tamils
Hinduism
By Shalini Balachandran
வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா நேற்று (11-09-2026) இடம்பெற்றது.
இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
மகோற்சவ திருவிழா
அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ் குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
4 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்