வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர்!
university
vavuniya
sri Lanka
By Kalaimathy
வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார்.
சர்வமத வழிபாடுகளின் பின்னர் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வவுனியா பல்கலைக்கத்தின் செயற்பாடுகளை ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளதாக கூறினார்.
கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி