வவுனியாவில் மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர் குழு - வலை வீசும் பொலிஸார்
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மதுபான போத்தல்களால் வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்று மதுபோதையில் அங்கிருந்த வீடு ஒன்றின் மீது மதுபோத்தல்களை எடுத்து வீசி வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தல் நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதால் இவ்வாறன சில இளைஞர்கள் மதுபோதையில் தொடர்ந்தும் பல சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


